நீதியைத் தேடும் மௌனச் சிலை - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » நீதியைத் தேடும் மௌனச் சிலை

நீதியைத் தேடும் மௌனச் சிலை

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:28



கொடுக்கக்கூடாத ஜாமீனை ஒருவருக்குக் கொடுக்க சுமார் 100 கோடி வரை விலை பேசப்பட்டதாம். யாருக்கு விலை? சில நீதிபதிகளுக்கு! ஒருவர் ஏற்கனவே சிறையில். மற்றவர்கள் மேல் விசாரணை. செய்தி வந்த அன்றைக்கு நான் சென்னை உயர்நீதி மன்றத்திற்குப் போக வேண்டியிருந்தது. வங்கி அதிகாரி என்றால் உபத்திரவமில்லாது, ஏசி அறையில் உட்கார்ந்து பணம் எண்ணும் வேலை என்று பலர் நினைக்கக் கூடும். சில சமயங்களில் வெட்டாத கிணற்றுக்குக் கொடுத்த கடனை வசூலிக்க கால் தேய நடந்த படலங்களும் ‘மனைவியின் அக்கௌண்டில் இருந்து நான் பணம் எடுப்பதைத் தடுக்கும் மானேஜர் யார்?’ என்று மல்லுக்கட்டும் கணவர்களும் ‘ரிடயர் ஆவதற்கு முன்தினம் 1976ல் ஒரு லோன் விண்ணப்பத்தில் நீங்கள்தான் கையெழுத்துப் போட்டீர்கள்;

மேற்படி பார்ட்டி வங்கியை ஏமாற்றியதில் உங்களுக்கு ஏன் பங்கு இருக்கக்கூடாது?’ என்று வரும் விசாரணைகளும் இதோ என்னைப்போல - யாரோ ஒருவரின் அக்கௌண்டில் பணம் போட, அந்த ஆள் மேல் லஞ்ச ஒழிப்பு விசாரணை வழக்கில், சாட்சி சொல்லும் துயரங்களும் நிறைந்த துன்பியல் காப்பியமே வங்கி அதிகாரிகளின் வாழ்வு. நான் சாட்சி சொல்ல வேண்டிய வழக்கு ஒத்திப் போடப்பட்டதால், உயர்நீதி மன்ற வளாகத்தில் காத்திருந்தேன். கருப்புடை தேவதைகளாய் பெண் வழக்கறிஞர்கள், எப்போதும் சூடுபிடித்திருக்கும் மசால்வடை வியாபாரம், எழுதி எழுதி மாயும் வக்கீல் குமாஸ்தாக்கள், எதற்காகவோ நடு வீதியில் அழும் ஒரு பெண், அவள் காலடியில் வெறித்த பார்வையுடன் நின்று கை சூப்பும் ஒரு பிஞ்சு, பான் பராக் கறைகள், உயர்நீதி மன்றத்தின் ஆஸ்ஸோ-ஸாக்ஸன் முறையில் கட்டப்பட்ட கோபுரங்கள்....

இவ்வளவுக்கும் நடுவில்தான் நான் தற்செயலாக அங்கு நிறுவப்பட்டிருக்கும் மனுநீதிச்சோழனின் சிலையைப் பார்த்தேன். ‘பார்த்தேன்’ என்றா சொன்னேன்? ‘தரிசித்தேன்’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். நெடிதுயர்ந்த சிலை. மன்னனின் கையில் பிடித்த செங்கோலும் பரந்து நீண்டிருக்கும் அவரின் தாடியும் காலடியில் தேர்ச்சக்கரத்தில் நசுங்கிக் கிடக்கும் பசுங்கன்று, இளவரசன் மற்றும் ஆராய்ச்சி மணியை அடிக்கும் பசுவின் உருவங்களும்.... அற்புதமான சிலைதான். சிலைக்குக் கீழே ‘சம நீதி கண்ட சோழன்’ என்று பொறித்திருக்கிறார்கள். தமிழ்ச் சமுதாயத்தில் தனிப்பெரும் நீதி அரசன் தன் பெயரைக் கூட இழந்து மௌனத்தில் நிற்கும் நிலை.

எனக்கு திடீரென்று காலையில் படித்த செய்தி நினைவிற்கு வந்தது. நூறு கோடி! யாராலும் குலைக்க முடியாத உறுதியோடு, கற்கோட்டை போல நிற்கும் மதிப்பிற்குரிய நீதிபதிகள் இன்றைக்கும் இருந்து இந்த தேசத்தின் குரலற்றவர்களின் கடைசிப் புகலிடமாக இந்திய நீதிமன்றங்கங்களைக் காத்து வருகிறார்கள். இடையில் இது போல சில செய்திகளைக் கேட்கும் போதுதான் மனுநீதிச் சோழன் போட்டுக் கொடுத்த நீதி எனும் ராஜபாட்டை நம் நினைவில் நிழலாடுகிறது.
நீதி கேட்க அந்த கண்ணகியை ‘‘நீ யார்?’’ என்று பாண்டியன் கேட்க, ‘‘பசுமாட்டின் கண்ணில் துளிர்த்த நீரைத் துடைக்கத் தன் புதல்வனைத் தேரில் ஏற்றிக் கொன்றானே மனுநீதி, அவனுடைய ஊர்க்காரி நான்’’ என்கிறாள்.

மனுநீதியின் கதையில் மிக மிக சுவாரசியமான பகுதி - பசுமாடு ஆராய்ச்சி மணியை அடிப்பது. (இப்போதைய நம் ஊர் பசுமாடு என்றால் மணியின் கயிற்றையாவது சாப்பிடுவோமே என்று அடித்திருக்கும்) இதுவரை அந்த நாட்டில் யாருமே அதைச் செய்ததில்லை. காரணம்? ஏதாவது குறை இருப்பவர்கள் மட்டுமே மணியை அடிக்க வேண்டும். யாருக்கும் எந்தக் குறையும் இல்லாத ஆட்சி மனுநீதியின் ஆட்சி. மணியின் சத்தம் கேட்டு மன்னன் பதறினான். ‘‘எதனால் இந்தப் பசு மணியை அடிக்கிறது?’’ அமைச்சரைக் கேட்டான். அரசரின் கேள்விக்கு அமைச்சன் சொன்ன பதிலை பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதுகிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த டிஃபென்ஸ் லாயர் ஒருவரை சாலை விபத்து வழக்கில், ஓட்டுனர் சார்பில் ஆஜராகச் சொன்னால் எப்படி வாதிடுவார்? அந்த மாதிரி மிக அருமையான முறையில், ‘‘உன் மகன் ஓட்டிய தேரில் பசுங்கன்று வந்து விழுந்து இறந்தது. ஆனால் அவன் குற்றவாளி அல்ல’’ என்று அமைச்சர் சொல்கிறார்.
‘வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந்
தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில்
போங்கால்
இளைய ஆன்கன்று தேர்க்கால் இடைப்புகுந்
திறந்ததாகத்
தளர் உறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை’
என்றார்.
   உன் மகன் மணி ஒலிக்கும் தேரில் போனான். - அவன் ஹார்ன் அடிச்சாம்ப்பா கன்னுக்குட்டி கேட்கல.. அந்தத் தேரோ நெடுந்தேர். மேலிருந்து பார்த்தால் கன்றுக்குட்டி தெரியாது - ‘அரசுப் பேருந்து டிரைவர்கள் நாய்க்குட்டியை நசுக்கினால், டிரைவரா காரணம்? பேருந்தின் உயரமல்லவா காரணம்?’ ஏகப்பட்ட படைகள் அவனோடு கூடப்போனது. கன்றுக்குட்டி நடுவில் வராமல் அவர்கள் அல்லவா தடுத்திருக்க வேண்டும்? அவன் போனது ராஜபாட்டை - இது பிரைவேட் ரோட். கன்றுக்குட்டி வந்தது ட்ரெஸ்பாஸிங்.
   அந்தக் கன்றுக்குட்டி இளையது - இளைய கன்றைக் காப்பாற்ற வேண்டியது தாயின் கடன் அல்லவா? தாய் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, தானே முறையிட முடியாது. காப்பீடு சம்பந்தப்பட்ட வழக்குகளில்   ‘க்ஷிளிலிணிழிஜிமி ழிளிழிதிமிஜி மிழியிஹிஸிமிகி’   என்று சொல்லி காப்பீட்டை மறுத்தால், அஜாக்கிரதையினால் விபத்து நடந்தால் காப்பீடு கிடையாது என்று பொருள்.
  கன்று தானே தேர்க்காலின் நடுவே புகுந்தது - இளவரசன் ஏற்றவில்லையப்பா. தானே குறுக்காலே வந்தது. இது திட்டமிட்ட கொலை இல்லை. கன்று தானே புகுந்ததால் ஏற்பட்ட விபத்து. இது
நெக்லிஜண்ட் ட்ரைவிங் அல்ல. இவ்வளவு அடுக்கான வாதங்களை நான்கே வரிகளில் அமைச்சர் கூறிவிட்டார்.
   மன்னன் பதில் சொன்னார்: ‘‘இளவரசன் மீது தவறின்றி இருக்கலாம். ஆனால் தன் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து உயிர்களுக்கும் தன்னாலோ, தன் உறவினர்களாலோ, பகைவராலோ, கள்வராலோ, விலங்குகளாலோ, எந்த ஆபத்தும் இன்றிக் காப்பது ஒரு அரசனின் கடமை அல்லவா? நான் அந்தக் கடமையிலிருந்து தவறி விட்டேன்’’ என்றார்.
  ‘‘கன்றைக் கொன்ற பாவத்திற்கு பரிகாரங்கள் உண்டு. பாவத்தைப் போக்கலாம்’’ என்றார், அமைச்சர்.
  ‘‘பாவம் கழுவப் பரிகாரம் உண்டு; பசுவின் கண்ணீரைக் கழுவ ஏது பரிகாரம்?’’ - இது மன்னர்.
  ‘‘சட்டமும் நீதியும் ஆறறிவு உடைய மனிதர்களுக்குத்தான்.’’
  ‘‘இந்தப் பசுவிற்கு ஆறாம் அறிவு இருந்ததால்தானே மணியை அடித்து நீதி கேட்கிறது?’’
  அமைச்சர் மௌனமாகி விடுகிறார். ‘‘பசுவின் கண்ணீரைப் போக்கத் தவறிய எனக்கு தண்டனை, நானும் அதே போல் மகனை இழந்து, கண்ணீர் விட வேண்டும்’’ என்று மனுநீதி தன் மைந்தனை தேர்க்காலில் இட்டுக் கொல்கிறான்.
  நீதி வழங்கப்பட்டது மட்டுமல்ல, தண்டனையும் உடனுக்குடன். மும்பையின் தெருக்களில் வெறியாட்டம் போட்ட கசாப்புக்கு நாளும் பிரியாணி போட்டு அவன் இயற்கை மரணம் அடையும் வரையில் வழக்கை நடத்துவது மாதிரியல்ல.
  தண்டனை நிறைவேறியவுடன் சிவபெருமான் தோன்றி கன்றுக்கும் இளவரசனுக்கும் மீண்டும் உயிர் அளிக்கிறார் என கதை முடிகிறது.
  எல்லா அமைப்புகளிலும் பொய்யும் லஞ்சமும் சுரணையற்ற தனமும் புகுந்த பின்னால் நம் தேசத்தின் நீதிமன்றங்களில் தங்களுக்காக கடைசியாக வாழ்வு கிடைக்கும்; இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மாற்று கிடைக்கும் என்று நம்பி கோர்ட் வளாகத்தில் கூடியிருக்கும் மக்களைப் பார்த்தேன். நீதி ஒரு தேர் போல அங்கே மெல்ல அசைந்து கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். மனுநீதி (என்கிற சமநீதி) சோழன் மாறாத புன்னகையுடன் சிலையாக உறைந்து நிற்கிறார். காலமும் அசையாது நிற்கிறது. இதோ, என் வழக்கு விசாரணைக்கு வந்து விட்டதாக வக்கீல் கூப்பிடுகிறார்..... (சிறகுகள் விரியும்)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்